தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 502 ரன்கள் எடுத்த நிலையில் ”டிக்ளேர்” செய்ததுள்ளது.
நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து நடைபெற்ற முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது. இதில் மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும், ரோகித் 115 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா 176 ரன்களில் ஆட்டமிழக்க, அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேரை அறிவித்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.