சிக்கலில் ரிலையன்ஸ்
புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் மண்ணில் ஐபிஎல் தொடரைப் போல டி-20 தொடர் (பி.எஸ்.எல்) நடைபெற்று வந்தது. இந்த தொடரை இந்தியாவைச் சேர்ந்த ஐஎம்ஜி - ரிலையன்ஸ் (அம்பானி குரூப்) நிறுவனம் ஒளிபரப்பு உரிமம் பெற்று உலக நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்தது. புல்வாமா தாக்குதலைக் காரணம் காட்டி ஐஎம்ஜி - ரிலையன்ஸ் நிறுவனம் திடீரென பி.எஸ்.எல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகியது. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த பிரச்சனை நீதித்துறைக்குச் சென்றுள்ளதால் ஐஎம்ஜி - ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் கட்டவேண்டிய சூழல் கண்டிப்பாக ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.