tamilnadu

img

இன்னும் 22 நாட்கள் உலகக்கோப்பை திருவிழா 2019

ஏழாவது உலகக்கோப்பையை (1999) இங்கிலாந்து நடத்தினாலும் வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் சில ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த முறை 12 அணிகள் பங்கேற்றன.வங்கதேசமும் ஸ்காட்லாந்தும் முதன் முறையாக இடம் பிடித்தன.இந்த கோப்பையில் தான் முதல் முறையாக சூப்பர்சிக்ஸ் எனும் புதிய நடைமுறை உருவாக்கப் பட்டது. இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களின் முடிவில் 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் பிரிவில் விளையாடின. இதில், நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தேர்வு செய்யப்பட்டன.இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் ‘மும்மூர்த்திகளான’ சச்சின், கங்குலி,டிராவிட் ஆகியோருடன் முகமது அசாருதீன், அஜய் ஜடேஜா, சடகோபன் ரமேஷ், நயன் மோங்கியா,அஜித் அகர்கர் என வலுவான பேட்டிங் வரிசை யுடன் களமிறங்கி சவுரவ் கங்குலி 183, ராகுல் டிராவிட் 145 ரன்களுடன் 373 ரன்களை குவித்து சாதனை படைத்தனர்.மறுபுறம், வித்தியாசமான சிகை அலங்கா ரத்துடன் இந்தத் தொடரில் கலக்கிய ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஒலாங்காவின் வேகத்தில் சரிந்த இந்திய வீரர்கள் 253 ரன்களை எடுக்க முடியாமல் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதை மறக்க முடியாது.இதேபோல், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான்அணியை கத்துக்குட்டி நாடான வங்கதேசம் தான் பங்கேற்ற முதல் உலகக் கோப்பை தொடரிலேயே 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வெற்றி உலகக் கோப்பையை வென்றது போன்ற களிப்பில் அந்த அணி நாடு திரும்பியது.

இந்திய அணி சூப்பர் சிக்ஸ் பிரிவோடு வெளியேறினாலும் மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தான் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கையிடம் பறிகொடுத்த ஆஸ்திரேலியா, 1999-ஆம் ஆண்டில் கோப்பையை வென்று தீரவேண்டும் என்று இங்கிலாந்து மண்ணில் களமிறங்கியது. அதற்கேற்றார் போல் அந்த அணி யின் ஆட்டம் அமைந்திருந்தது.இரண்டாவது அரையிறுதியில் தென் ஆப் பிரிக்காவுக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்ததுஆஸ்திரேலியா அணி. 48 ஓவர்களில் 195 ரன்களைஎடுத்திருந்த தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்தன. 12 பந்துகளில் 18 ரன் எடுத்தால் இறுதி ஆட்டத்துக்குள்நுழைய முடியும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.மெக்ராத் வீசிய 49 வது ஓவரில் ஒரு ரன் சேர்த்தநிலையில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தென் ஆப்பிரிக்கா கேப்டனும் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். ஆனாலும், இந்த உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்ற லான்ஸ் குளூஸ்னர் மலை போல்நின்று அந்த ஓவரின் 5வது பந்தில் சிக்ஸர் அடிக்க ஆட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.

கடைசி 6 பந்தில் 9 ரன் அடிக்க வேண்டும். கையில் இருப்பதோ ஒரு விக்கெட். இந்த இன்னிங்சின் கடைசி ஓவரை பிளமிங் வீச முதல் இரண்டு பந்துகளையும் எல்லைக்கோட்டுக்கு விரட்டினார் குளூஸ்னர். நிலமை தலைகீழானது. 4 பந்து மீதமிருக்க தென் ஆப்பிரிக்கா வெற்றிக்குஒரு ரன் தேவை என்ற நிலை மாறியது. கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றிபெற அடுத்த முனைக்கு குளூஸ்னர் ஓடி வந்து விட்டார். அந்த முனையிலிருந்த ஆலன் டொனால்ட்பந்தை பார்த்தபடி திகைத்து நிற்க, பின்னர் ஓடமுயற்சிக்க பதற்றத்தில் தடுமாறி மட்டையை கீழே போட்டுவிட, ஆஸ்திரேலிய வீரர்கள் சாதுரியமாகரன் அவுட்டாக்கி வெற்றியைப் பறித்துச் சென்றனர்.லீக் ஆட்டத்தில் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கஅணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த தால் புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த ‘‘த்ரில்”வெற்றி ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்தது. 

உலகின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தை பார்ப்பதற்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்த இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர். ஆஸ் திரேலிய அணியின் ‘கூள் மேன்’ என்று அழைக்கப்படும் ஸ்டீவ் வாவ் வழக்கம்போல் இந்த ஆட்டத்திலும் அலட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் போல்நெருக்கடியிலிருந்து அணியை காப்பாற்றும் பொறுப்பைத் திறம்பட நிறைவேற்றினார் ஸ்டீவ் வாக். கிரிக்கெட் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை பிடித்த மந்திர சுழல் மன்னன் ஷேன் வார்னே, வேகப் பந்து வீச்சாளர் மெக்ராத் கூட்டணி அசத்தியது. சுழற்பந்தை அனாவசியமாக எதிர்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்களை தனது மந்திர சுழலில் சிக்க செய்த வார்னே நான்கு விக்கெட்டுகளை அள்ளினார். அடுத்த முனையில், வேகத்தில் அசத்திய மெக்ராத் 3 விக்கெட்டை சாய்த்து பாகிஸ்தானை 132 ரன்களுக்குள் வாரிச் சுருட்டினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் பீன்ஸ் கிரிட் அதிரடியாக 54 ரன்களை குவிக்க 37 ஓவர்களில் வெற்றி இலக்கை மிக எளிதில் எட்டி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலியா கோப்பையை வென்றாலும் தென் ஆப்பிரிக்காவின் லான்ஸ் குளூஸ்னர் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.