கிரிக்கெட் உலகில் பன்னெடுங்காலம் கோலோச்சிய மேற்கு இந்தியத் தீவுகள்அணி முதல் முறையாக 2007-ஆம் ஆண்டில் (9-வது சீசன்) உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை பெற்றது. இந்த தொடரில் பெர்முடா அணி முதல்முறையாக அறிமுகமானது.இந்தியா, இங்கி லாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் கத்துக்குட்டிகளான கனடா, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் கலந்து கொண்டன.மொத்தம் 16 அணிகள் களமிறங்கிய இந்ததொடரில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு கூடுதல்முக்கியத்துவம் தருகிறோம் என்ற பெயரில் கரீபியன் தீவுகளின் பாரம்பரியமான ட்ரம்ஸ்மற்றும் சாங்கு நடனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் போட்டியை நேரில் பார்ப்பதற்கு வரும்உள்ளூர் ரசிகர்கள் கூட்டம் வெகுவாககுறைந்தது.எதிரணிகளின் குறை நிறைகளை ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் அணியின் வீரர்களுக்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் நவீன முறையைப்பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மரும் (இங்கிலாந்து), இந்திய பயிற்சியாளர் கிரேக் சேப்பலும்(ஆஸ்திரேலியா) அதற்கான கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தினர்.இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக்சேப்பல் அணித் தலைவர் கங்குலி இடையே யான மோதல் உச்சத்தை அடைந்தது.கங்குலியைகேப்டன் பதவியை பறித்தும் அணியிலிருந்து நீக்கி ஓரங்கட்டவும் கிரேக் சேப்பல் பலமுறை முயற்சி செய்தும் தோல்வி அடைந்தார். கடும்சிக்கல்களுக்கு இடையே கங்குலி உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தார். பயிற்சியாளரின் எதேச்சதிகார அணுகு முறையால் இந்திய அணி லீக் ஆட்டங்களில் படுதோல்வியைச் சந்தித்து சூப்பர் 8 பிரிவுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகும்.
சூப்பர் 8 சுற்றில் கத்துக்குட்டியான வங்கதேசம்பலமான தென் ஆப்பிரிக்காவை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும் அரையிறுதிக்கு தகுதிபெற முடியாமல் வாய்ப்பை இழந்து சோகத்துடன்வெளியேறியது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்தைத் தோற்கடித்த இலங்கையும், தென் ஆப்பிரிக்காவை எளிதில் ஊதித் தள்ளிய ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. போட்டியை நடத்திய மேற்கு இந்தியத்தீவுகள் சூப்பர் 8 பிரிவோடு ஆறாவது இடத்துடன்நடையைக் கட்டியது உள்ளூர் ரசிகர்களுக்கு பேரிடியானது.1996-ஆம் ஆண்டு நடந்த இறுதி ஆட்டத்தில்இலங்கையிடம் தோல்வியடைந்து கோப்பையை இழந்த ஆஸ்திரேலியா அணி, மீண்டும் இறுதிப்போட்டியில் இலங்கையை சந்திக்கும் வாய்ப்பு இம்முறை கிடைத்தது. பிரிட்ஜ் டவுன் மைதான த்தில் நடந்த இறுதிப் போட்டியின் போது மழை பெய்ததால் 38 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணிக்கு 36 ஓவர்களில் 269 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது. மழை குறுக்கிடலாம் என்ற சூழலில் வேகமாகஇலக்கை துரத்திச் சென்ற இலங்கையின் வேகத்திற்கு மீண்டும் தடைப் போட்டது மழை.சிறிது நேரத்திற்குப் பிறகு ஆட்டம் துவங்கினாலும் மழை தொடர்ந்து இடையூறாக இருந்ததால் டக் லூயிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
நடுவர்கள் முடிவிற்கு இலங்கை அணி கடும் ஆட்சேபணை தெரிவித்ததை அடுத்து 18 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போதிய வெளிச்ச மின்மை காரணமாக மறுநாள் தொடரலாம் என்றும்கூறப்பட்டது. ஆனால், இலங்கை அணி கேப்டன்ஜெயவர்த்தனே தொடர்ந்து ஆடுவதற்கு சம்மதம்தெரிவித்தார்.சிறிது நேர தாமதத்திற்குப் பின்பு நள்ளிரவில் ஆட்டம் தொடங்கியது. இலங்கை அணியை திணற வைக்க ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சுழற்பந்து வீச்சாளர்களை மட்டும் களமிறக்கினார். நள்ளிரவு நேரம் என்பதால் ஈரப்பதம் மற்றும் மந்தமான காலநிலையால் சுழற்பந்து வீச்சு தாறுமாறாக திரும்பியது.18 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமேஎடுத்த இலங்கை அணி 53 ரன்கள் வித்தியாச த்தில் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலிய அணி ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் கோப்பையை தட்டிச் சென்றது முத்தாய்ப்பாக அமைந்தது. இந்த சொதப்பல் காரணங்களுக்காக நடுவர்கள் மன்னிப்பும் கேட்டனர். ஆட்டநாயகனாக ஆடம் கில்கிறிஸ்ட்டும் தொடர் நாயகனாக மெக்ரத்தும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.