tamilnadu

img

தனியார் ஆக்கிரமிப்பில் சுகாதார நிலையம் பழங்குடியின மக்கள் ஆவேசம்

தனியார் ஆக்கிரமிப்பில் சுகாதார நிலையம் பழங்குடியின மக்கள் ஆவேசம் 

உதகை, நவ. 24- நீலகிரி மாவட்டம், உதகைக்கு அருகே யுள்ள மாவனல்லா கிராமத்தில், துணை  ஆரம்ப சுகாதார மையத்துக்குச் சொந்தமான  இடத்தை அரசியல் பிரமுகர் ஒருவர் ஆக்கிர மித்துள்ளதைக் கண்டித்தும், அந்த ஆக்கிர மிப்பை மீட்காமல் புதிய கட்டுமானப் பணி கள் தொடர்வதை கண்டித்தும், இருளர்  பழங்குடியினர் உட்பட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கட்டுமானப் பணிகளை முற்று கையிட்டு நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவனல்லா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியினர் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். இங்குள்ள 7 சென்ட் நிலத்தில் கடந்த  40 ஆண்டுகளாக ஒரு துணை ஆரம்ப சுகாதார  மையம் செயல்பட்டு வந்தது. இம்மையத்தின் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்ததால், சுகாதா ரத் துறை ஊழியர்கள் யாரும் அங்கு தங்குவ தில்லை. இந்நிலையில், இந்த சுகாதார மையத்தின்  பின்புறம் இருந்த சுமார் 3 சென்ட் காலி இடத் தை, அப்பகுதியைச் சேர்ந்த ஓர் அரசியல் பிர முகர் ஆக்கிரமித்து புதிதாக வீடு கட்டி வரு வதாகக் கூறப்படுகிறது. வீடு கட்டும்போதே கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது, பழைய துணை ஆரம்ப சுகா தார நிலையக் கட்டிடத்தை இடித்துவிட்டு, சுமார் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டி டம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பணி  தொடங்குவதற்கு முன்பாகவே, ஆக்கிரமிக் கப்பட்ட 3 சென்ட் இடத்தை மீட்ட பிறகு, வாகன  நிறுத்தும் வசதியுடன் புதிய கட்டுமானப் பணி களைச் செய்ய வேண்டும் என கிராம மக்கள்  ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் ஆக்கிரமிப்புப் பிரச்சினை யைத் தீர்க்காமல் அவசரமாகப் பணிகளைத் தொடங்கியதாகத் தெரிகிறது. இதனால் அதி ருப்தியடைந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்தனர்.  ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட பின்ன ரும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் கட்டுமா னப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த தால், ஆவேசமடைந்த பழங்குடியினர் மக்கள்  மற்றும் கிராமவாசிகள் ஒன்று திரண்டு வந்து கட்டுமானப் பணிகளை முற்றுகையிட்டு உட னடியாக நிறுத்துமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், “ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு  சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள் ளது. ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு புதிதாகப் பணிகளை தொடங்க வேண்டும் எனப் பல முறை வலியுறுத்தியும், இதுவரை அரசு அதி காரிகள் செவிசாய்க்கவில்லை. மேலும் ஒப் பந்ததாரரும் வேகவேகமாகப் பணிகளைச் செய்து வருகிறார். இதற்கு சரியான தீர்வு  காணாவிட்டால், அடுத்த கட்டமாக பெரிய  அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள் ளோம்” என்றனர். 40 ஆண்டுகள் பழமையான துணை சுகாதார நிலையத்தின் இடத்தை  அரசியல் பிரமுகர் ஆக்கிரமித்து இருப்பதும்,  அதனை மீட்காமல் புதிய கட்டுமானப் பணி கள் மேற்கொண்டு வருவதும் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.