tamilnadu

img

சாலை வசதியில்லாததால் மூதாட்டியை டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்

சாலை வசதியில்லாததால் மூதாட்டியை டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்

உதகை நகராட்சியில் உள்ள  கணபதி நகரில் சாலை வசதி இல் லாத காரணத்தால், உடல்நிலை சரி யில்லாத மூதாட்டி ஒருவர் டோலி கட்டி தூக்கிச் செல்லப்பட்ட சம்ப வம் நிகழ்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை நக ராட்சியில் 36 வார்டுகளில் ஒரு லட் சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். உதகை சர்வதேச சுற்றுலாத்தலமாக இருந்தாலும், இங்கு அடிப்படை பிரச்சனைக ளுக்கு தீர்வு காணப்படாமல் உள் ளது. கணபதி நகரில் சுமார் நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லை.  இதனால், உடல்நிலை சரியில்லாத வர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட் டுள்ளது. இந்நிலையில், மாராத் தம்மாள் (60) என்ற மூதாட்டி உடல் நிலை சரியில்லாததால், அவரை டோலி கட்டி தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கணபதி நகரிலிருந்து 100 மீட்டர் தூரம் வரை டோலி கட்டி  செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதன்பின்னர், ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் தான் பிர தான சாலையை அடைய முடியும். மழைக்காலங்களில் இப்பகுதியில் நடக்கவே முடியாத நிலை உள் ளது. எனவே, உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், இதன் மூலம் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்ல முடி யும் என்று கோரிக்கை விடுத்துள்ள னர்.