tamilnadu

img

சாடிவயல் வளர்ப்பு யானைகள் முகாமில் அரசு செயலர் சுப்ரியா சாஹூ ஆய்வு

சாடிவயல் வளர்ப்பு யானைகள் முகாமில் அரசு செயலர் சுப்ரியா சாஹூ ஆய்வு

சிறுவாணி சாலை, சாடி வயல் யானைகள் முகாமில் நடைபெற்று வரும் வளர்ப்பு யானைகள் முகாம் கட்டுமா னப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என இதனை ஆய்வு செய்த வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்தார். கோவை மாவட்டம், சாடிவயல் யானை கள் முகாமில் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. பின்னர் அவை டாப் சிலிப் யானைகள் முகா முக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில், அதே பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைக்க வனத் துறை சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்காக, ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் 18 யானைகளுக் கான கூடாரங்கள், 3 நீச்சல் குளங்கள், 3 சவர் குளியல் குழாய்கள், கண்காணிப்பு கோபுரம், 50 ஏக்கர் பரப்பு எல்லைகளில் மின் வேலி, யானை பாகன்கள் தங்க 8 விடுதிகள், கழிவு  மேலாண்மை மையம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் கடந்த ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த பணிகள் 95 சத வீதம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ, முதன்மை வனப்பாதுகாவ லர் சீனிவாச ரெட்டி, தலைமை வனப்பாது காவலர் வெங்கடேசன், மாவட்ட வன அலுவ லர் ஜெயராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் செவ் வாயன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வளர்ப்பு யானைகள் முகா மில் யானைகளுக்கு தேவையான வசதிகள், உணவு கூடம் மற்றும் பாதுகாப்புகள் குறித்து செயலர் சுப்ரியா சாஹூ கேட்டறிந்தார். தொடர்ந்து வனத்துறை ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். இதையடுத்து, செய்தியா ளர்களிடம் பேசிய சுப்ரியா சாஹூ, சாடிவயல் வளர்ப்பு யானைகள் முகாம் பணிகள் கிட்டத் தட்ட 95 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலை யில், விரைவில் ஒன்றிய அரசு ஒப்புதல் பெற்ற  பின் இந்த வளர்ப்பு யானைகள் முகாம் செயல் பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.