tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய இஸ்லாமியர்கள்

கோயம்புத்தூர்,மார்ச் 5- கோயம்புத்தூர் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா தேரோட்டம் செவ்வாயன்று விமரிசையாக நடைபெற்றது. ராஜா வீதியில் இருந்து புறப்பட்ட தேர், ஒப்பணைக்கார வீதி, வைசியால் வீதி, கருப்பக்  கவுண்டர்வீதி வழியாக மீண்டும் தேர் திடலை வந்தடைந்தது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். முன்னதாக, தேர் பவனி அத்தார் ஜமாத் பள்ளி வாசல் வழியாக சென்றபோது, அங்கு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு சுமார் 5,000 தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.  ஒவ்வொரு ஆண்டும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர், குளிர்பானங்கள் கொடுத்து உபசரிப்பது வழக்கமான ஒன்று என்று அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.