மூத்த தோழர் சக்திவேல் காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வொற்றியூர் பகுதி குழு முன்னாள் உறுப்பி னர் ஆர்.சக்திவேல் (75) செவ்வாயன்று (மார்ச் 4) உடல் நலக்குறைவால் கால மானார். இவர் திருவொற்றியூர் எண்ணூர் மணலி சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினராக திறம்பட செயல்பட்டவர். எஸ்.ஆர்.எப். தொழிற்சாலையில் செயலாளராகவும், பொதுத்தொழிலாளர் சங்கத்தின் செய லாளராகவும், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் முழு நேர ஊழியராகவும் களப்பணியாற்றியவர். திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், சிஐடியு அமைப்பதில் மகத்தான பங்கை செலுத்தியவர். வரதராஜ பெருமாள் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எஸ்.பாக்கியலட்சுமி, சி.திருவேட்டை, இரா.முரளி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் செல்வகுமாரி, பகுதிச் செயலாளர்கள் எஸ்.கதிர்வேல், ஆர்.கருணாநிதி, நிர்வாகிகள் வீர.அருண், அம்சா, அப்புசாமி, சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் புதனன்று (மார்ச் 5) மாலை எர்ணாவூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.