tamilnadu

img

கோவையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கோவை,மே.02- கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணி வாகன ஓட்டுநர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணி வாகன ஓட்டுநர்களுக்கு, தனியார் ஒப்பந்த நிறுவனம் முறையாகச் சம்பளம், வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ நிதி ஆகியவற்றை வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பணியைப் புறக்கணித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று முதல் புதிதாக ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனமும், ஊதியம், வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ பிடித்தம் உள்ளிட்ட எந்த விபரங்களைக் கூறாமல் பணி செய்ய நிர்பந்தம் செய்ததாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.