tamilnadu

img

கல்வி உரிமைக்கான கூடல் நிகழ்ச்சி

கல்வி உரிமைக்கான கூடல் நிகழ்ச்சி

நவீன பாசிசவாதிகளிடமிருந்து கல் வியை மீட்டெடுப்போம்! என்ற தலைப்பில் கல்வி உரிமைக்கான கூடல் நிகழ்வு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்தினர். ஒன்றிய பாஜக அரசு,  புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறது. கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கும் முனைப்பில் மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இச்சூழலில் நவீன  பாசிசவாதிகளிடமிருந்து கல்வியை மீட்டெ டுப்போம்! தமிழக கல்வியை பாதுகாக்க மீண்டும் ஒரு போர் தொடுப்போம்! என்ற தலைப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோவை, பீளமேடு நகரக்குழு சார்பில் ஆவாரம்பாளையத்தில் கல்வி உரிமைக் கான கூடல் நிகழ்வு திங்களன்று நடைபெற் றது. வாலிபர் சங்க பீளமேடு நகரச் செயலாளர் என்.சக்திவேல் தலைமை வகித்தார். பொரு ளாளர் எம்.ஸ்ரீதர் வரவேற்றார். கோரிக்கை கள் குறித்து டிஎன்ஜிசிஏ மேனாள் மாநிலத் தலைவர் மருத்துவர் டி.வீரமணி, மாணவர் நல பெற்றோர் சங்க மாநில துணைத்தலை வர் வி.தெய்வேந்திரன், வாலிபர் சங்க மாவட் டப் பொருளாளர் எம்.தினேஷ் ராஜா, மாண வர் சங்க மாவட்டத் தலைவர் அகமது ஜூல்பி, சிபிஎம் நகரக்குழு உறுப்பினர் அய்யாசாமி ஆகியோர் உரையாற்றினர்.