வஃக்பு வாரிய தடையாணையை நீக்க நாகைமாலி எம்எல்ஏவிடம் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் வடுகபாளையம் கிராமத்தில் பத்திரப்பதிவு செய்ய வஃக்பு வாரியம் தடை யாணை விதித்திருப்பதை நீக்குவதற்கு அரசிடம் கோரிக்கை முன்வைத்து நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் பங்கேற்க வருகைதந்த நாகை மாலி எம்.எல்.ஏ. விடம் வஃக்பு வாரிய தடையாணையால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது. இந்த மனுவை பெற்றுக் கொண்டு விரைவில் சென்னை யில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்வதாக நாகை மாலி எம்எல்ஏ தெரிவித்தார். அவருக்கு பாதிக்கப்பட்டோர் நன்றி தெரிவித்தனர். அப் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். குமார் உடனிருந்தார். இந்நிகழ்வில் பயனாளிகள் சார்பில் ப. சண்முகம், கை.குழந்தைசாமி, ஏ.டி.தங்கராசு, கல்யாணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.