tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கழிவுகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி

சேலம், மார்ச் 5- மேட்டூர் அனல் மின்  நிலையம் எதிரே தொழிற் சாலை கழிவுகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால் பொது மக்கள் அவதியடைந்து வரு கின்றனர். சேலம் மாவட்டம், மேட் டூர் - சேலம் சாலையில் அனல் மின் நிலையம் சுற்றுச்சுவர் அருகில் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுகின்றன. துர் நாற்றம் வீசும் இந்த கழிவு களை சமூக விரோதிகள் தின மும் தீ வைத்து எரிப்பதால் அனல் மின் நிலையத்தில் தீ  விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அப்பகுதி யில் வசிக்கும் பொது மக்க ளுக்கு துர்நாற்றம் வீசுவ தோடு மூச்சுத்திணறலும் ஏற் படுகிறது. இந்த தீயினால் சாலையோரம் நெடுஞ்சா லைத்துறையால் நடப்பட்ட மரங்கள் எரிந்து சேதமாகி வருகின்றன. இப்பகுதியில் கரும்புகை கிளம்புவதால் எதிரே வரும் வாகனம் தெரி யாமல் விபத்து ஏற்படும் அபா யமும் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும். தொழிற்சாலை கழிவுக ளைக் கொட்டி மாசுபடுத்தும் தொழிற்சாலையின் அனும தியை ரத்துசெய்ய வேண் டும், என அப்பகுதி பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் கற்க வேண்டும்!

தமிழ் மொழியை ஆபத்திலிருந்து காப் பாற்ற, மாணவர்கள் இலக்கியங்களை படிப் பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள  எஸ்.ஆர்.வி.எஸ். பள்ளியில் 16 ஆவது ஆண்டு விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில்  அண்மையில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் அனிதா ஹரி வரவேற்றார். பள்ளி முதல்வர் சுந்தரி முன்னிலை வகித்தார். மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய நீதிபதி செந்தில்குமார், “தமிழ் மொழி ஒரு பழமையான மொழி. மாணவ, மாணவி கள் தமிழ் இலக்கியங்களை படிக்க ஆர்வம் காட்ட வேண்டும். பெண் குழந்தைகளின் பாது காப்பில் கவனம் தேவை. பெற்றோர்கள் குழந் தைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்த  வேண்டும், என்றார். அதன்பின், கடந்தாண்டு 10-ஆம் வகுப் பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாண விகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். இந் நிகழ்ச்சியில், சார்பு நீதிபதி பாலமுருகன்,  காவல் கண்காணிப்பாளர் நிஷா, சைபர்  கிரைம் ஏ.டி.எஸ்.பி. மணிகண்டன், டவுன்  டி.எஸ்.பி. நவீன்குமார், உதகை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரி யர் ஷகானா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.