tamilnadu

img

வீட்டு வசதி வாரிய தடையின்மை சான்று வழங்கிடுக

வீட்டு வசதி வாரிய தடையின்மை சான்று வழங்கிடுக

கோவை, பிப்.26- கோவை கணபதி அருகே உள்ள கே.கே.நகர் (கலை ஞர் கருணாநிதி நகர்) குடியி ருப்போர் நலச் சங்கத்தினர், தங்கள் பகுதிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தடையின்மைச் சான்று (NOC) வழங்கக் கோரி, பீள மேட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் புதனன்று  மனு அளித்தனர். அந்த மனுவில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது: கணபதி பகுதியில் உள்ள க.ச. எண்கள் 57/1, 57/2, 58, 59, 59/1, 59/2 மற்றும் 65 ஆகிய நிலப் பரப்புகளில் அமைந்துள்ள கலைஞர் கருணா நிதி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து  வருகிறோம். அரசின் அனைத்து வரிகளை யும் முறையாகவும், காலதாமதமின்றியும் செலுத்தி வருகிறோம். பத்திரப்பதிவில் சிக்கல்: தற்போது தடையின்மைச் சான்று (NOC) இல்லாத காரணத்தினால், காலிமனைகள் மற்றும் கட்டிடங்களை மறுசீரமைப்பு செய் யவோ, வாங்கவோ, விற்கவோ முடிவ தில்லை. மேலும், பெயர் மாற்றம் மற்றும் பாகப்பிரிவினை போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளை பத்திரப்பதிவு அலுவல கத்தில் மேற்கொள்ள முடியாமல் பெரும் சிர மத்திற்குள்ளாகி வருகிறோம். தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வீட்டு  வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகி யோர் நில விடுவிப்பு தொடர்பாக அறிவிப்பு களை வெளியிட்ட போதிலும், மேற்கூறிய சர்வே எண்கள் இன்னும் வாரியத்திடம் இருந்து விடுபடாத நிலையிலேயே உள்ளன.  எனவே, பொதுமக்களின் நலன் கருதி உடனடி யாக தடையின்மைச் சான்று வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மனு அளிக்க சென்றவர்கள் கூறுகையில், “செயற்பொறியாளர் எங்கள்  கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்தார். அவர் பேசிய விதம் எங்களுக்கு மிகுந்த  நம்பிக்கையை அளித்துள்ளது. நிலுவையில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு, விரைவில் தடையின்மைச் சான்று கிடைக்கும் என்ற  நற்செய்தியை எதிர்பார்க்கிறோம்,” என்ற னர்.