மத பதட்டத்தை தூண்டும் விதமான போராட்டம் கூடாது என கோவையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தொடர்ந்த பிஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தி உள்ளார்.
கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கோவையில் வருகின்ற 31"ஆம் தேதி பாஜக சார்பில் பந்த் அறிவிக்கபட்டுள்ள நிலையில் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், எம்பி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் கோவை நாடாளுமன்ற் உறுப்பினர் பி.ஆர் நடராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய நடராஜன் கூறியதாவது காவல் துறை நடவடிக்கையினை இந்த கூட்டம் வரவேற்கின்றது. கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் என்ஐஏ கட்டுப்பாட்டில் இருந்தவர். இதை என்ஐஏ தோல்வி என சொல்வார்களா?
என்ஐஏ விசாரணையை இந்த கூட்டம் வரவேற்கின்றது.
பதட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பந்த அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் மறுபரீசிலனை செய்ய வேண்டும். போராட்டத்தை திரும்ப பெற்று அமைதியை நிலை நாட்ட வேண்டும் எனவும் மத பதட்டத்தை தூண்டும் விதமான போராட்டம் கூடாது அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.