இழப்பீடுகேட்டு பவர்கிரீட் நிலையம் முற்றுகை
இழப்பீடு கேட்டு பாப் பாரப்பட்டி அருகே உள்ள பவர்கிரீட் நிலையத்தை 50க் கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென் னாகரத்தை அடுத்த பாப் பாரப்பட்டி அருகே உள்ள பால்வாடி பகுதியில் பவர் கிரீட் நிலையம் அமைந்துள் ளது. இங்கிருந்து 400 கிலோ வாட் திறன் கொண்ட மின்சார டவர் புலிகரைப்பகுதிக்கு செல்கிறது. பாலவாடி, மாக்கனூர், கானாப்பட்டி, ஓ.ஜி.அள்ளி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலத்தின் வழியாக மின்கம்பங்கள் அமைக் கப்பட்டுள்ளன. ஆனால், இரண்டு வருடங் களாகியும் விவசாயிகளுக்கு தகுந்த இழப் பீடு வழங்கவில்லை. பலமுறை அதிகாரி களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேச மடைந்த அப்பகுதி விவசாயிகள் 50க் கும் மேற்பட்டோர், செவ்வாயன்று பாலவாடி பகுதியில் அமைந்துள்ள பவர்கிரீட் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பாரப்பட்டி காவல் துறையினர் விவசாயிகளை சமாதானப்படுத் தினார். அதன்பின் வந்த உதவி செயற் பொறியாளர் இழப்பீடு வழங்குவதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்தார். அதன் பின் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.