tamilnadu

img

கூலி உயர்வு கோரி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மனு

கூலி உயர்வு கோரி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மனு

திருப்பூர், ஜன.20- கறிக்கோழி வளர்ப்பு விவசாயி களுக்கு வளர்ப்பு கூலியாக ரூ.20 வழங்க வேண்டும். முத்தரப்பு கூட் டத்தை நடத்தி தீர்வு காண அரசு முன் வர வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஊத்துக்குளி, பல்ல டம், காங்கேயம், உடுமலை, மடத் துக்குளம் பகுதி வட்டாட்சியர் அலு வலகங்களில் மனு அளித்தனர். தேங்காய் மஞ்சி உள்ளிட்ட இடு பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், கறிக்கோழி வளர்ப்பு  விவசாயிகளுக்கு உரிய கூலியை  நிறுவனங்கள் தருவதில்லை. தற் போது ஒரு கிலோ கோழி வளர்ப் பிற்கு குறைந்தபட்ச கூலியாக ரூ. 6.50 மட்டுமே தரப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் கிலோ விற்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க  வேண்டும். விவசாயிகள், தொழிலா ளர்களை பாதுகாத்திட அரசு நல வாரியம் அமைக்க வேண்டும். கோழிப் பண்ணைகளுக்கு காப் பீடு, இலவச மின்சாரம் வங்கிகள்  மூலம் மானியம் வழங்க வேண்டும்,  மேலும் ஆண்டு தோறும் முத்தரப்பு  கூட்டங்களை அரசு நடத்தி பிரச் சனைகளுக்கு அரசு தீர்வு காண  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு கறிக் கோழி வளர்ப்பு விவசாயிகள் சங் கம் தலைமையில் 5 மையங்களில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  மணிஷ் நாராணவரே மற்றும் பல்ல டம் வட்டாட்சியர் ராஜேஷ் ஆகி யோரிடம் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வை. பழனிச்சாமி தலைமையில் மனு அளித்து, கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலை வர் கே.வி.சுப்பிரமணியம், ஒன்றி யப் பொருளாளர் எஸ்.லோக நாதன், ஒன்றியப் பொறுப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று ஊத்துக்குளி,  காங்கேயம், உடுமலை, மடத்துக்கு ளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வு களில், விவசாயிகள் சங்க மாநில  துணைத்தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்டக்குழு உறுப்பி னர் பொன்.வேலுச்சாமி, தாலுகா  நிர்வாகிகள் எஸ்.கே.கொளந்த சாமி, பாலதண்டபாணி, எம்.எம். வீரப்பன், வெள்ளியங்கிரி, நித்தி யானந்தம், சிபிஎம் காங்கேயம் (பொ) செயலாளர் ஆர்.செல்வ ராஜ், தென்னை விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் பரமசிவம், ஒன்றிய நிர்வாகிகள் நிர்வாகிகள் அருண்பிரகாஷ், ராஜகோபால், தங்க வடிவேலன், விஜயகுமார், தயானந்தன், சிவராஜ், கணேஷ், விவசாயத் தொழிலாளர் சங்க செயலாளர் கனகராஜ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.