tamilnadu

img

ஓய்வூதியத்தை கருவூலம் மூலம் வழங்கிடுக ஓய்வூதியர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியத்தை கருவூலம் மூலம் வழங்கிடுக ஓய்வூதியர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச.12- பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி ஓய்வூதியர்கள் அனை வருக்கும் ஓய்வூதிய பலன்களை கருவூலம் மூலம் வழங்க  வலியுறுத்தி, தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி ஓய்வூதியர் நல அமைப்பினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஆந்திர அரசு வழங்குவது போல பேரூராட்சி, நகராட்சி,  மாநகராட்சி ஓய்வூதியர் அனைவருக்கும் ஓய்வூதிய பணப்  பலன்கள் மற்றும் ஓய்வூதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும். பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பணி வரன்முறை செய்யப்பட்ட என்எம்ஆர் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி யம் அனுமதித்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பேரூராட்சி, நக ராட்சி, மாநகராட்சி ஓய்வூதிய நல அமைப்பினர் ஆத்தூர்  நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கூட்டமைப்பின் தலைவர் எம். கலைமணி தலைமை ஏற்றார்.  இதில் தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி ஊழியர் சங்க மாநில செயலாளர் என். செந்தில்குமார் துவக்க உரை யாற்றினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் கே. சீனிவா சன் கோரிக்கையை விளக்கிப் பேசினார். மாநிலச் செயலாளர் பி.எம். குமார் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.