tamilnadu

img

பழுதாகி நின்ற பேருந்தால் பயணிகள் அவதி

பழுதாகி நின்ற பேருந்தால் பயணிகள் அவதி

பள்ளிபாளையம் அருகே நடுச்சாலையில் பேருந்து பழு தாகி நின்றதால், பள்ளி மாண வர்கள் உட்பட பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு அரசு நகர  பேருந்து (K1), ஈரோடு  பேருந்து நிலையத்திலி ருந்து கருங்கல்பாளையம், பள்ளிபாளையம், கணபதி பாளையம், சீராம்பாளையம் வழியாக குமார பாளையம் வரை தினசரி இயக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், புதனன்று மதியம் பள்ளிபாளையம் அடுத்த ஒட்ட மெத்தை பேருந்து நிலையம் பகுதியில் பயணிகளை ஏற்ற வந்த அந்த பேருந்து, திடீரென நடுச் சாலையில் பழுதாகி நின்றது. ஓட்டுநர் எவ்வ ளவோ முயற்சித்தும் பேருந்தை இயக்க முடியவில்லை. அதன்பின் நடத்துநர் பேருந் திலிருந்து கீழே இறங்கி வந்து அப்பகுதி யில் பேருந்திற்காக காத்திருந்த பள்ளி மாண வர்களை கொண்டு முன்பக்கமாக தள்ள  வைத்து இயக்க முற்பட்டனர். ஆனாலும், பேருந்தை இயக்க முடியவில்லை. அதன் பின் பேருந்தின் பின்பக்கமாக மாணவர்களை கொண்டு சிறிது தூரம் தள்ள வைத்து ஸ்டார்ட்  செய்த பின் வண்டியை இயக்கினர். கிட்டத் தட்ட அரை மணி நேரமாக அந்த பேருந்தில் பயணித்தவர்கள், பேருந்துக்காக காத்தி ருந்த மாணவர்களை கொண்டு, இயக்க போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.