இருசக்கர வாகனம் நிறுத்துமிடமாக
மாறிய பாலக்கோடு பேருந்து நிலையம்
பாலக்கோடு பேருந்து நிலையம், இருசக்கர வாக னம் நிறுத்துமிடமாக மாறி வருவதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி பகுதி யிலுள்ள பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் உள் ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்து நிலை யத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பய ணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. பேருந்துகளுக்கு இடையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தப்படுவதாலும், பேருந்து நிலையத்தில் காலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு வெளியூர் சென்று இரவு வாகனத்தை எடுத்து செல்லுவதால், பொதுமக்களுக்கும், பேருந்துகளுக் கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வரும் வாகனங்களால், பேருந்து நிலை யம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடமாக மாறி வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படு வது மட்டுமின்றி, அதிவேகத்தில் வரும் வாகனங்க ளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாண வர்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.