ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோதக் கொள்கைக்கு எதிர்ப்பு
திருப்பூர், பிப். 4- விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், தற்கொலை களை தடுத்து நிறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு, தற் போது விவசாயிகளுக்கு எதிரான கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை களை கண்மூடித்தனமாக செயல் படுத்துகிறது. ஒன்றிய மோடி அரசின் விவசா யிகள் விரோத நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் மண்டல அளவிலான மாபெரும் தொடர் முழக்க தர்ணா போராட் டம் திருப்பூர் ராயபுரம் ரவுண்டானா அருகில் புதனன்று நடைபெற்றது. இதில் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், பெண்களும் திர ளாகப் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி னர். போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி. பெருமாள் தலைமை ஏற்றார். திருப் பூர் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி வரவேற் றார். போராட்டத்தில் பங்கேற்ற பல் வேறு மாவட்டச் செயலாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் விவசாயி கள் சந்திக்கும் பிரத்யேகப் பிரச் சனைகளை முன்வைத்துப் பேசி னர். குறிப்பாக நீலகிரி மாவட்டத் தில், வனவிலங்கு மோதல், பயிர் சேதாரம் மற்றும் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பட்டா பிரச்சனைகள் குறித்து ஏ.வி. ஜோஸ் உரையாற் றினார். கோவை (வி.ஆர்.பழனி சாமி): பிப்ரவரி 12 அன்று நடைபெற வுள்ள பொது வேலை நிறுத்தத் தில் விவசாய இயக்கங்கள் பங்கேற் பதன் அவசியம் குறித்து விளக்கி னார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க திருப்பூர் மாவட் டச் செயலாளர் ஆ.பஞ்சலிங்கம் 100 நாள் வேலைத் திட்டத்தை (MGNREGA) முடக்கும் வகையில் மோடி அரசு செயல்படுவதைக் கடுமையாகச் சாடினார். கரூர் (கே. சக்திவேல்): பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நிலவும் குள றுபடிகளால் விவசாயிகள் வஞ்சிக் கப்படுவதைச் சுட்டிக்காட்டினார். திருப்பூர் (ஆர். குமார்): இப்பகுதி யில் நிலவும் ‘இனாம் நிலம்’ தொடர் பான சிக்கல்களால் விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்களை பேசினார். ஈரோடு (ஏ.எம். முனு சாமி): விவசாயிகளின் கடன் சுமை மற்றும் கடன் தள்ளுபடி செய்யா மல் ஒன்றிய அரசு ஏமாற்றி வருவது குறித்துப் பேசினார். தருமபுரி (சோலை அர்ஜுனன்): விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) நிர்ண யிக்காமல் ஒன்றிய அரசு விவசாயி களை வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டி னார். கிருஷ்ணகிரி (சி. பிரகாஷ்): விவசாய நிலங்கள் கையகப்படுத் தப்படுவதற்கு எதிராக விவசாயி கள் சந்திக்கும் சவால்களை பகிர்ந்து கொண்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் (சிபிஐ) மாநிலச்செயலாளர் சி. எம். துளசிமணி, மோடி அரசின் கார்ப்பரேட் மற்றும் அமெரிக்க ஆத ரவு கொள்கைகள் இந்திய விவசா யத்தை அழிப்பதை விவரித்தார். தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வெ. பொன்னையன், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற் காக செங்கொடிச் சங்கம் முன்னெ டுக்கும் போராட்டங்களை வாழ்த் திப் பேசினார். மாநிலக்குழு உறுப்பி னர் ஆ. பொன்னுசாமி வன உரிமைச் சட்டம் குறித்தும், மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் புதிய விதைகள் மசோதாவால் ஏற்ப டப்போகும் ஆபத்துகள் குறித்தும் விளக்கினர். முடிவில், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி. டில்லிபாபு சிறப்புரை யாற்றினார். அப்போது, ஒன்றிய அர சின் வேளாண் விரோதப் போக்கு களையும், கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்குச் சாதகமாகச் சட்டங்கள் இயற்றப்படுவதையும் விரிவாக எடுத்துரைத்தார். முடிவில், மாவட் டப் பொருளாளர் அ. பாலதண்ட பாணி நன்றி கூறினார்.
