tamilnadu

399 அரசு, தனியார் ஸ்கேன் மையங்களில் கண்காணிப்பு

399 அரசு, தனியார் ஸ்கேன் மையங்களில் கண்காணிப்பு

சேலம், ஏப்.6- கர்ப்பிணிகளின் கருவிலுள்ள பாலின விவரங்களைப் பாதுகாக்கும் நோக்கில், சேலம் மாவட்டத்தில் உள்ள 399 அரசு, தனியார் ஸ்கேன் பரிசோதனை மையங்களில் கண்கா ணிப்பு தீவிரப்படுத்தப்படும், என  ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத் துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை, 9 வட்டார அளவி லான மருத்துவமனைகள், 2 வட்டார மில்லா மருத்துவமனைகள், 20 சமு தாய சுகாதார நிலையங்கள், 67 கூடு தல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள், 502 துணை சுகாதார நிலை யங்கள் மூலம் பொதுமக்களுக்கு அனைத்து விதமான மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன. மாவட்டத்தில் 130 தனியார் மகப் பேறு மருத்துவமனைகளும், 399  அரசு, தனியார் ஸ்கேன் பரிசோ தனை நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் கர்ப்பிணிகளின் கருவின் பாலினம் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படு கிறதா? என கண்காணிக்கப்படும். அதேபோல ஒவ்வொரு ஸ்கேன் இயந் திரத்துக்கும் தனியாக பதிவேடுகள் பராமரிக்க வேண்டும் என ஸ்கேன் மைய நிர்வாகங்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில்  நூறு விழுக்காடு சுகப்பிரசவங் கள் நடைபெறும் வகையில் மருத்து வத்துறையினரால் தொடர் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளது”, என்றார்.