tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

விஜய் வருகை தாகத்தைத்தான் ஏற்படுத்தும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கிண்டல்

கோவை, டிச.18- விஜய் அரசியல் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத் தாது, அவருக்கு வரும் கூட்டத்திற்கு தாகம் தான் ஏற்படும்  என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். தமிழக வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வியாழனன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும்  ஆட்சி அமைக்கும். முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டாவது  முறையாக முதலமைச்சராவார்” என்றார். தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது எந்த அளவு  தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு,  “விஜய் வருகை தாக்கம் ஏற்படுத்தாது. கூட்டத்துக்கு வரும்  மக்களுக்கு தாகம் தான் ஏற்படும். அதற்கு தண்ணீர் ஏற்பாடு  செய்ய வேண்டும்” என நகைச்சுவையுடன் பதிலளித்து சென் றார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

உதகை, டிச.18- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக உதகை  வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நீலகிரி மாவட்ட வனத்துறை  கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தொடர் விடுமுறையான கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன் னிட்டு நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக் கப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.  வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி சென்று வீடியோ எடுக்கவோ அல்லது டிரோன் விடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைதல் தண்ட னைக்குரியது என்பதால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, ‘ஹிட்டன் ஸ்பாட்ஸ்’ என்று கூறி சமூக வலைத் தளங்களில் பதிவிடக்கூடாது. பாதுகாப்பு இல்லாததால் அந்த  இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவ தில்லை. உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் அது போன்ற இடங்க ளுக்கு அத்துமீறி சென்று சமூக வலைத்தளங்களில் பதி விட்டால், அவர்கள் மீது வனச்சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு  செய்து கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட வன அலுவ லர் கவுதம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகரில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு

கோவை, டிச.18- கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்க கோவை ஒப்பணக் கார வீதியில் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்ல  தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை மாநகரின் முக்கிய வணிகப் பகுதியான ஒப்பணக் கார வீதியில் கனரக வாகனங்கள் மற்றும் ஆம்னி பேருந்து கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று  போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்கள் செயல்ப டும் இந்த வீதி, கோவையின் முக்கிய ஷாப்பிங் தலமாக விளங்குகிறது. உக்கடம் திசையிலிருந்து வரும் கனரக வாக னங்கள், தனியார் ஆம்னி பேருந்துகள், பாலக்காடு செல்லும்  கேரள அரசு பேருந்துகள் இந்த வழியாகச் செல்வதால் அடிக் கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பா கத் திருவிழா காலங்களில் நடந்து செல்லவே இடமில்லாத அளவுக்கு வாகன நெரிசல் அதிகரிப்பதால் மக்கள் பெரி தும் அவதிப்பட்டு வந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு, கனரக வாகனங்கள் மற் றும் ஆம்னி பேருந்துகளுக்கு மாற்றுப் பாதை அறிவிக் கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் அறிவிப்புப் பல கைகள் வைக்கப்பட்டுள்ளன. தடை நேரத்தில் இந்த வீதியில்  செல்லும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிப்பது, வழக்குப்  பதிவு செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். இந்தத் தடை அமலானதால் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பொதுமக்களுக்கு வசதி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூரில் குப்பை பிரச்சனைக்கு தீர்வு கோரி டிச.29-இல் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 18- திருப்பூர் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை போர்க் கால அடிப்படையில் அகற்ற வலியு றுத்தியும், திடக்கழிவு மேலாண்மை  திட்டத்தை முறையாக செயல் படுத்தக் கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிசம்பர் 29ஆம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என சிபிஎம் மாவட்டக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎம் திருப்பூர் மாவட்டக் குழு கூட்டம் அவிநாசி சாலை தியாகி பழனிச்சாமி நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.  ஜெயபால் தலைமையில் நடை பெற்றது. இதில் மாநில செயற்குழு  உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு, திருப் பூர் மாநகரின் 60 வார்டுகளிலும், நொய்யல் கரையோரங்களிலும் கடந்த இரண்டு மாதங்களாக குப்பைகள் மலைபோல் குவிந்துள் ளன. இதனால் ஈக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி, பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. குப்பைகளை எரிப் பதால் வெளியாகும் நச்சுப் புகை யால் சுவாசம் சார்ந்த பாதிப்புக ளும் ஏற்படுகின்றன. பின்னலாடைத் தொழில் வளர்ச் சியால் கடந்த 40 ஆண்டுகளாக குப்பை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், உள்ளாட்சி நிர்வாகங்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வெற்றிக ரமாக செயல்படுத்தத் தவறிவிட் டன. குப்பைகளை கிராமப்புற பாறைக் குழிகளில் கொட்டும் முயற் சிக்கு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குப்பை வரி வசூலிக்கும் மாநகராட்சி, குப்பையை அகற்றாமல் இருப்பது  கண்டிக்கத்தக்கது. கடந்த இரண்டு  மாதங்களாக குப்பையை அகற்றா மல் இருப்பது, இதற்கு மாற்று வழி முறையை கண்டறியாமல் இருப் பது எந்த வகையிலும் ஏற்க முடி யாது. இந்த அணுகுமுறை கண்டிக் கத்தக்கது. குப்பை அகற்றத்திற்கு ஒப்பந் தம் எடுத்திருக்கும் சீனிவாசா திடக் கழிவு மேலாண்மை நிறுவனம் (swms) விதிமுறைப்படி குப்பையை தரம் பிரித்து, சேகரித்து, எவ்வித முறைகேடும் இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை பிரச்சனை தொடர் பாகப் போராடும் பொதுமக்கள் மீதான காவல் துறையின் அடக்கு முறையைக் கைவிட வேண்டும். திருப்பூரின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, அறிவியல் பூர்வமான நிரந்தரத் தீர்வை எட்ட  தமிழக அரசு நேரடியாகத் தலை யிட வேண்டும். இந்தக் கோரிக்கை களை வலியுறுத்தி, டிசம்பர் 29 (திங்கள்) காலை 10 மணிக்கு திருப் பூர் மாநகராட்சி அலுவலகம் எதி ரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த  இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட் டது.