tamilnadu

img

திருப்பூரில் மினி ஜவுளிப் பூங்கா திறப்பு

திருப்பூரில் மினி ஜவுளிப் பூங்கா திறப்பு

திருப்பூர் வீரபாண்டி மாமரத்தோட்டம் பகுதியில் அரசு மானியத்துடன் ரூ.16 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள சிறு அளவு ஜவுளிப் பூங்காவை அமைச்சர்கள் மு. பெ.சாமிநாதன், காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், கைத்தறி கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை அரசு  செயலாளர் வே.அமுதவல்லி, துணிநூல் இயக்குநர் இரா.ல லிதா, கைத்தறித்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் குறைந் தது 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி  தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். இத்திட்டத்தி னைச் செயல்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டத்தில் ஆர் எம்எஸ் மினி டெக்ஸ்டைல் பூங்கா நிறுவனம் என்ற சிறப்பு  நோக்கு முகமை, பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை  சமர்ப்பித்தது. இப்பூங்காவில் ஆர்எம்எஸ் டெக்ஸ்டைல்ஸ் பினிசர்ஸ், ஸ்ரீ அம்மன் கலர்ஸ், ஸ்ரீ சப்தகிரி பிராசஸ் ஆகிய  மூன்று நிறுவனங்கள் செயல்பட உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் சிறு அளவு ஜவுளிப்பூங்கா திட்டத் தில் ஐந்து பூங்காக்கள் அமைத்திட ஜவுளித் தொழில் முனை வோர்களிடமிருந்து விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட் டன. இதில் அனைத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு, மீதம்  நான்கு ஜவுளிப் பூங்காக்களின் கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகிறது. இதன் மூலம் இப்பகுதியை சோர்ந்த 200  பேருக்கு வேலை வாய்ப்பு அமையும்.என அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்தார்.