tamilnadu

img

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மாரத்தான்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மாரத்தான்

கோவை, ஏப்.6-  உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, கோவையில் மாரத்தான் நடைபெற்றது. கோவை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறை, உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ”ஆரோக்கிய மான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்” என்ற கருப் பொருளுடன் 2.5/5 கி.மீ. தூர மாரத்தான் நிகழ்வை ஞாயி றன்று நடத்தியது. சமூக நலனையும், ஆரோக்கிய விழிப் புணர்வையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந் நிகழ்வு, கோவை மருத்துவக் கல்லூரியின் அவிநாசி ரோடு  வளாகத்தில் தொடங்கியது. கல்லூரியின் முதல்வர் டாக்டர்  ஏ. நிர்மலா எம்.எஸ்., டி.ஜி.ஓ., கொடியசைத்து துவக்கி வைத் தார். இப்போட்டியில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட சுமார் 800 பேர் பங்கேற்றனர்.