tamilnadu

img

அரசு கலைக்கல்லூரியில் மாரத்தான்

அரசு கலைக்கல்லூரியில் மாரத்தான்

தருமபுரியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி, தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இப்போட் டியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் 10 இடங்களை பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் சான்றிதழ்கள், கேடயம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.சாந்தி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கோ.கண்ணன், உடற்கல்வி இயக்குநர் கு.பாலமுருகன், தேசிய மாணவர் படை அலுவலர் தீர்த்தகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு, கல் லூரி முதல்வர், பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர் கள் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரி வித்தனர்.