வஃக்பு வாரியத் தடையாணையை நீக்கக்கோரி
நாகை மாலி எம்எல்ஏவிடம் நில உரிமையாளர்கள் மனு
ஊத்துக்குளி வட்டம், வடுகபாளை யம் கிராமத்தில் பத்திரப்பதிவு செய்ய வஃக்பு வாரியம் தடையாணை விதித் திருப்பதை நீக்குவதற்கு அரசிடம் கோரிக்கை முன்வைத்து நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட நில உரிமை யாளர்கள் கோரிக்கை மனு அளித்த னர். திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் நடைபெறுகி றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த நாகை மாலி எம்.எல்.ஏ.விடம் வஃக்பு வாரியத் தடையாணையால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது. இந்த மனுவை பெற்றுக் கொண்டு விரைவில் சென்னையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து பேசுவ தற்கு ஏற்பாடு செய்வதாக நாகை மாலி எம்எல்ஏ தெரிவித்தார். அவருக்கு பாதிக்கப்பட்டோர் நன்றி தெரிவித்தனர். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உடனி ருந்தார். இந்நிகழ்வில் பயனாளிகள் சார்பில் ப.சண்முகம், கை.குழந்தை சாமி, ஏ.டி.தங்கராசு, கல்யாணம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாக்கடை வசதி கேட்டு போராட்ட எதிரொலி
பணிகளைத் தொடங்க பேரூராட்சி நிர்வாகம் உறுதி!
சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி யில் சாக்கடை வசதி பணிகளை தொடங் கவுள்ளதாக, பேரூராட்சி நிர்வாகம் உறு தியளித்துள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி பேரூ ராட்சி 6 மற்றும் 11 ஆவது வார்டுக்குட் பட்ட பகுதிகளில் ரூ. 20 லட்சம் மதிப்பி லான சாக்கடை அமைக்க அடிக்கல் நாட் டப்பட்டும் பணிகள் தொடங்காததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். சுமார் 15 ஆண்டுகாலமாக சாக் கடை வசதி கேட்டு போராடி வந்த அப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜன.31 ஆம் தேதி அடிக்கல் நாட் டப்பட்டது. ஆனால், ஆரம்பக்கட்ட பணி களுடன் நின்று போனதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் பிப்ர வரி 18-ஆம் தேதி பேரூராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அளவீடு செய்யப்பட்டும் பணிகள் தொடங்கப்பட வில்லை. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் பணிகளைத் தடுத்து வரு வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, வேறு வழியின்றி அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட் டம் நடத்த அறிவித்தனர். இந்நிலை யில், பேரூராட்சி நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபி நாத், காவல்துறை உதவி ஆய்வாளர் ரகுநாதன், வருவாய் ஆய்வாளர் மோக னசுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் அருண், குடியிருப்போர் சங்க நிர்வாகி கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் சசி உள்ளிட் டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில், உடனடியாக பணிகளைத் தொடங்கு கிறோம் என பேரூராட்சி நிர்வாகம் உறு தியளித்தது. இதனையடுத்து, காத்தி ருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.