tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

ஈரோடு, நவ.21- பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்திற்குள் புகுந்த  யானைகள், அங்கு சாகுபடி செய்திருந்த 200 வாழை மரங் களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலைய டைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட கொத்தமங்கலம் மற்றும் புதுப்பீர்கடவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 5  யானைகள், கடந்த சில நாட்களாக புதுப்பீர்கடவு ஊராட்சிக் குட்பட்ட புதுக்காடு பகுதியில் உலா வருகின்றன. இந்நிலை யில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜனனிபிரியா (37) என்பவரது தோட்டத்திற்குள் புதனன்று புகுந்த 5 யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட வாழை மரங் களை சேதப்படுத்தின. அப்போது விவசாயத் தோட்டத்தில் தங்கியிருந்த தொழிலாளி மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் யானைகள் நடமாடுவதை கண்டு அச்சமடைந்த னர். தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசு களை வெடித்து யானைகளை நீண்ட போராட்டத்துக்கு பின்  வனப் பகுதிக்குள் விரட்டினர். இதுகுறித்து உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழங்கால நாணயக் கண்காட்சி

நாமக்கல், நவ.21- பழங்கால நாணயங்கள் வெளிநாட்டு ரூபாய்கள் குறித்து  அறிந்து கொள்ள நாணயக் கண்காட்சி நாமக்கல்லில் உள்ள  அரசுப்பள்ளியில் வெள்ளியன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அருவங்காடு உயர்நிலைப்பள்ளியில், நாணய சேகரிப்பில்  ஈடுபடும் தாமரை ராஜ் என்ற இளைஞர் தான் சிறுவயது முதல் சேகரித்து வரும் நாணயங்கள் கண்காட்சியை நடத்தி னார். இந்த கண்காட்சியில் பழமையான நாணயங்கள் அரபு நாடுகளான துபாய், அமெரிக்கா,துருக்கி உள்ளிட்ட பல்வேறு  நாடுகளில் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகள், அமெ ரிக்காவின் நாணயங்கள், பழங்கால முத்திரைத்தாள் ஆவ ணங்கள் மற்றும் வெளிநாட்டு தபால் தலைகள், இந்தியா வின் தபால் தலைகள் என பல்வேறு பொருட்களை கண் காட்சியில் வைத்திருந்தார். இதனை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர்.

இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

கோவை, நவ.21- அரசு பேருந்து ஓட்டுநருக்கு உரிய இழப் பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அரசு பேருந்து பணிமனையில், ஓட்டுநராக பணியாற்றி வருபவர் துரைசாமி (57). இவர்  கடந்த 2021 மே.5 ஆம் தேதி ஈரோடு - உடு மலைபேட்டை சாலையில் பேருந்தை ஓட்டிச்  சென்றபோது, மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் பேருந்தில் விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த நபர் இரண்டு நாட்கள் சிகிச்சையில் இருந்து உயிரிழந்தார். இந்நிலையில், பேருந்தை இயக்கிய துரைசாமியை அரசு  போக்குவரத்து கழக அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த  இடை நீக்கம் காலத்தில் பாதி ஊதியம் வழங் கியதோடு, பணிக்கொடைகளை வழங்கா மல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஜன.7 துரைசாமி கோவை தொழிலா ளர் நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தார். அதில், மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், நிறுத்தி வைத்த ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதை யடுத்து மார்ச் மாதம் முதல் பணி வழங்க வும், நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் பணிக் கொடை என ரூ.32,157 வழங்கவும் உத்தர விடப்பட்டது. ஆனால், அரசு போக்குவரத்து கழகம் செயல்படுத்தாதால், மீண்டும் கடந்த 2023 மார்ச் மாதம் தொழிலாளர் நல நீதி மன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய் தார். அந்த விசாரணை நடைபெற்று வந்த  நிலையில், கடந்த நவ.10 ஆம் தேதி அரசு  பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், வெள்ளியன்று கோவை மாந கரில் இயக்கப்படும் எண்.11 அரசு பேருந்து கோவை ரயில் நிலையத்திற்கு வந்த போது, அதனை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத் தில் நிறுத்தினார்.

காட்டெருமையை வேட்டையாட முயற்சி; கைது

உதகை, நவ.21- உதகை அருகே, காட் டெருமையை வேட்டையாட முயற்சித்த நபரை வனத்து றையினர் கைது செய்தனர். உதகை அருகே உள்ள  கல்லக்கொரை தெற்கு வனக் கோட்டத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித் திரிந்து காட்டெருமை வேட் டையாடுவதாக வனத்து றைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இட மான வகையில் சுற்றித்தி ரிந்த நபரை வனத்துறை பிடித்து விசாரணை நடத்தி னர். தீவிர விசாரணையில், கேரளா மாநில வளிக் கடவு  பகுதியை சேர்ந்த ரெஜி (47) என்பவர், காட்டெருமையை வேட்டையாட வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். 

விற்பனைக்காக மும்பையிலிருந்து கடத்தி வரப்பட்ட பச்சிளங்குழந்தை மீட்பு

ஈரோடு, நவ.21- மும்பையிலிருந்து பவானிக்கு விற்ப னைக்காக கடத்தி வரப்பட்ட, பிறந்து 10 நாட் களே ஆன பச்சிளங்குழந்தையை மீட்ட போலீ சார், ஒருவரை கைது செய்து, இருவரை தேடி  வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள  ஒரு வீட்டில் பச்சிளங்குழந்தை கடந்த இரு  நாட்களாக இருப்பதாக 1098 என்ற குழந்தை கள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், பவானி காவல் துறையி னர் துணையுடன், ஈரோடு மாவட்ட குழந் தைகள் பாதுகாப்புக் குழும அலுவலர்கள் புதனன்று இரவு விசாரணை மேற்கொண் டனர். அதில், பவானி திருநீலகண்டர் வீதி யைச் சேர்ந்த பிரவீன்குமார் (32), தற்போது மெக்கான் வீதியில் வசித்து வரும் வீட்டில், பிறந்து 10 நாள்கள் ஆன பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பிர வீன்குமாரிடம் விசாரிக்கையில், குழந்தை குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல் களை தெரிவித்துள்ளார். இதையடுத்து, பச் சிளங்குழந்தை மீட்கப்பட்டு, ஈரோடு மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்ப டைக்கப்பட்டது. விசாரணையில், விற்பனைக் காக ஒரு பெண் குழந்தை தேவைப்படு வதாக, தனக்கு தெரிந்த இரு பெண்களி டம் பிரவீன்குமார் கூறியுள்ளார். அதன் பேரில், மும்பையில் இருந்து குழந்தையைக் கடத்திக் கொண்டு வந்து கொடுத்துச் சென் றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிர வீன்குமாரை கைது செய்த காவல் துறை யினர், இரு பெண்களையும் தேடி வருகின்ற னர். இவரிடம் பெண் குழந்தை வேண்டும் என கேட்ட நபர்கள் குறித்தும் விசாரணை நடை பெற்று வருகிறது.