புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் கிழக்கு மாநகரம், மக்களின் சேவகன் அறக்கட்டளை இணைந்து கோட்டை சூசன் அம்மாள் மஹாலில் புதனன்று நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு சங்க மாநகரத்தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில், முன்னாள் வாலிபர் சங்க நிர்வாகி கே. பச்சைமுத்து, மாநகரச் செயலாளர் விமல் குமார், பொரு ளாளர் கவின்ராஜ், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி ரத்தவங்கி அதிகாரி மருத்துவர் ரவீந்திரன், அறக்கட்டளை நிர்வாகிகள் மோகன் பூமாலை கிருபா ஜீவா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்த கொண்டு,ரத்ததானம்வழங்கினர்.
