அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்பேன்!
கோவை, மார்ச் 30- யாரையும் குறைத்து மதிப்பிடுவ தற்காக தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், திமுக அரசின் சாதனைக ளைக் கூறி மக்களிடம் ஆதரவு திரட்டி வெற்றி பெறுவேன் என்றும் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந் தில் பாலாஜி, திங்களன்று காந்திபுரம் பகுதியில் தனது தேர்தல் பணிக்குழு அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் உள்ள பத்து தொகு திகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கடந்த முறை கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதி களிலும் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்திருந்த நிலையில், இந்த முறை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் தமக்கு இங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட் டார். கரூரைப் போலவே கோவையும் தமக்கு நெருக்கமானது. கடந்த ஐந் தாண்டுகளில் கோவையில் சுமார் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழிப் பூங்கா போன்ற திட்டங்கள் கோவை மக்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளன. மேலும், பம்ப் செட் உற்பத்தியாளர்களின் கோரிக் கையை ஏற்று, தமிழகம் முழுவதும் 20 லட்சம் விவசாயிகளுக்கு புதிய பம்ப் செட்டுகள் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட் டுள்ளது. இத்தகைய மக்கள் நலத் திட் டங்களே தங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும். அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து பலனடைந்த பயனாளிகளின் வாக்குகளைப் பெறுவதே தனது இலக்கு, என்றார். இந்நிகழ்வில், மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, வி.ராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர், கிழக்கு நகரச் செயலாளர் என்.சுபாஷ், மேற்கு நகரச் செயலாளர் பி.சி.முருகன் மற்றும் காங் கிரஸ், சிபிஐ, மதிமுக, விசிக, கொம தேக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
