tamilnadu

img

கேங்மேன் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி

கேங்மேன் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி

கோவை, பிப்.4- மின்வாரிய உத்தரவின்படி உரிய பணி களை மட்டுமே வழங்க வலியுறுத்தி சிஐடியு  கேங்மேன் தொழிலாளர்கள் சோமனூரில் நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டம் வெற்றி  பெற்றுள்ளது. கோவை தெற்கு வட்டம், சோமனூர் கோட்டத்தில் பணியாற்றும் கேங்மேன் தொழி லாளர்கள், வாரிய உத்தரவின்படி தங்களுக் குரிய பணிகளை மட்டுமே செய்வோம் என  கடந்த 19.01.2026 அன்று கடிதம் வழங்கியி ருந்தனர். ஆனால், ஒரு சில பொறியாளர்கள் வாரிய விதிகளுக்கு மாறாக பணி செய்யக் கோரி தொழிலாளர்களை மிரட்டும் தொனி யில் பேசியதுடன், அவர்களுக்கு குறிப் பாணையும் (Memo) வழங்கினர். அதிகாரிக ளின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும், குறிப்பாணையை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் சோம னூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவல கம் முன்பு செவ்வாயன்று சிஐடியு நிர்வாகிகள்  மற்றும் தொழிலாளர்கள் திரண்டு முற்றுகைப்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்  தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களின் நியாயமான கோரிக் கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், வழங்கப் பட்ட குறிப்பாணைகளை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து  போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தில் சிஐடியு மண்டலச் செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன், கோவை தெற்கு வட்டத் தலைவர் பி. காளி முத்து, செயலாளர் ரத்தினகுமார், மாநகர செயலாளர் எம். தண்டபாணி மற்றும் சோம னூர் கோட்ட நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர்.