அமெரிக்க வரிகளால் ஏற்றுமதி 11.8 சதவீதம் சரிவு நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 3.47 லட்சம் கோடியானது!
புதுதில்லி, நவ. 19 - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த அதிகப்படியான வரிகளின் காரணமாக 2025 அக்டோபரில் இந்தியாவின் ஏற்றுமதி 11.8 சதவிகிதம் சரிந்து, 2 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக, வர்த்தகப் பற்றாக்குறையானது (Trade Deficit) 3 லட்சத்து 47 ஆயிரம் கோடியாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கு முன், 2025 செப்டம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை 2 லட்சத்து 75 ஆயி ரம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்த நிலை யில், அக்டோபரில் அது மேலும் 72 ஆயிரம் அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அதிகபட்ச வர்த்தகப் பற்றாக்குறை இதுவாகும். திங்களன்று (நவ. 17) வெளியிடப்பட்ட அரசுத் தரவுகளின்படி, இந்தியாவின் இறக்குமதி 16.63 சதவிகிதம் அதி கரித்து, அதன் மதிப்பு 6 லட்சத்து 73 ஆயி ரம் கோடி ரூபாயாக எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டி யுள்ளது. இந்த இறக்குமதி அதிகரிப்பு க்கு, தங்கம், வெள்ளி, கச்சாப் பருத்தி/கழிவு, உரம், கந்தகம் ஆகியவற்றின் அதிக இற க்குமதி முதன்மைக் காரணம் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில், இறக்குமதிகள் 6.37 சதவிகி தம் அதிகரித்து 39 லட்சத்து 89 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், ஏற்று மதிகள் ஒரு சதவிகிதம் கூட அதிகரிக்க வில்லை. வெறும் 0.63 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து 22 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 2025 ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை 17 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள் ளது. இதுவே கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 63 ஆயிரம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜவுளித் துறைக்கு பெரும் பாதிப்பு இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவிகித வரிகள், ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியை கடுமையாகப் பாதிக்கத் துவங்கிவிட்டது. பருத்தி நூல், துணி, துணிகள் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்கள், செயற்கை இழைகள், சணல் பொருட்கள், தரை விரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து பிரிவுகளிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடு கையில் 2025 அக்டோபரில் இரட்டை இலக்கச் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 அக்டோபரில் ஜவுளி ஏற்றுமதி 12.92 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேநேரத் தில் ஆடை ஏற்றுமதியும் 12.88 சத விகிதம் சரிந்துள்ளது என்று இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு (CITI) தெரிவித்துள் ளது. ஜவுளி ஏற்றுமதி 3.54 சதவிகிதம் குறைந்துள்ளது.
