கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மாநாடு துவக்கம்
கோவை வேளாண்மைப் பல் கலைக்கழகத்தில் இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை ஏற்பாட்டில், சுற்றுச்சூழலின் நீடித்த நிலைத்தன்மை குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு செவ்வாயன்று துவங்கியது. காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, நிலையான மேம்பாடு போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் சவால்களை விவாதிக்கும் சர்வதேச மேடையாக இந்த மாநாடு அமைய உள்ளது. விவசா யம் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியை மேம்படுத்தும் தொழில்நுட்ப அமர் வுகள், விளக்ககாட்சிகள், கூட்டு வாய்ப்புகள் ஆகியவை மாநாட்டில் இடம்பெறுகின்றன. வேளாண்மை பல்கலைக்கழகத் தில் உள்ள அண்ணா அரங்கத்தில் துவக்க விழா நடைபெற்றது. துணை வேந்தர் வெ. கீதாலட்சுமி தலைமை வகித்தார். இயற்கை வள மேலாண்மை இயக் குனர் ப. பாலசுப்பிரமணியம் வரவேற் றார். இதில், கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் வி.திரு நாவுக்கரசு, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க துணை இயக்குனர் விவேக் குமார் யாதவ், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், தேயிலை வாரிய நிர்வாக இயக்குனர் எம்.முத்துகுமார், பஞ்சாப் விளை யாட்டு மற்றும் இளைஞர் சேவை சிறப்பு செயலாளர் எஸ்.பி. ஆனந்தகுமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒருங்கிணைந்த தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக துணைவேந்தர் கீதா லட்சுமி பேசுகையில், “காற்று, மண், நீர், திடக்கழிவு, மாசு மற்றும் சுற்றுச் சூழல் மேலாண்மை ஆகிய 6 முக்கிய பகுதிகளில் அதிநவீன தொழில்நுட்பங் களை பயன்படுத்தி உலகளாவிய மாசு கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், கார் பன் அளவை குறைக்கவும் இந்த மாநாடு வழிவகுக்கும்” என்றார்.