தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொல்லை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம்
பெண் தூய்மைப் பணியாளருக்கு பாலி யல் தொல்லை அளித்ததாக பெறப்பட்ட புகா ரைத் தொடர்ந்து, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றிய அலு வலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பர மசிவம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மூன்று மாதங்களுக்கு முன் அதே அலுவல கத்தில் பணிபுரிந்த 35 வயது பெண் தூய் மைப் பணியாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பெண் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவியிடம் புகாரளித்தார். இதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை தணிக் கையாளர் மதுமிதா, கூடுதல் திட்ட அலுவ லர் நந்தினி ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து, அறிக்கை அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த ஏப்.7 ஆம் தேதியன்று அந்தக்குழு, ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் விசாரணை செய்து, அதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதைத்தொடர்ந்து, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் மற்றும் அலுவலக உதவியாளர் கணேசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சி யர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வெற்றிகர மாக நடைபெற்று வரும் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையத்திற்கு, நகல் எடுக்கும் ஜெராக்ஸ் மிஷின் வாங்குவதற்காக தாராபுரத்தைச் சேர்ந்த ரத்தின சபாபதி, ரூ. 75 ஆயிரம் நன்கொடையை, பயிற்சி மையத்தை நடத்தும் குழுவைச் சேர்ந்த என்.கனகராஜிடம் வழங்கினார். ஆசிரியர்கள் சீனி வாசன், துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.