வங்கிக் கணக்கில் பணம் பிடித்தம் வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டனர்
திருப்பூரில் ஒரே நேரத்தில் 30க் கும் மேற்பட்டோரின் வங்கி கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட வர்கள் எஸ்பிஐ வங்கியை புத னன்று முற்றுகையிட்டனர். திருப்பூர் தாராபுரம் சாலை கரட் டங்காடு பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கானோர் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ள 30க்கும் மேற்பட்டோ ருக்கு புதனன்று எவ்வித முன்ன றிவிப்பும் இன்றி குறைந்தபட்சம் ரூ. 2000 முதல் அதிகபட்சம் ரூ.20 ஆயி ரம் வரை பணம் பிடித்தம் செய்யப் பட்டுள்ளதாக, குறுஞ்செய்தி சென் றுள்ளது. கணக்கில் பணம் இல்லாதவர்க ளுக்கு மைனஸ் அமௌண்ட் காண் பிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையா ளர்கள் புதனன்று காலை வங்கி முன் திரண்டனர். இது குறித்து பணம் பிடித்தம் செய்யப்பட்ட வாடிக்கையாளர் சிலர் கூறுகையில், எனது வங்கி கணக்கில் செவ்வாயன்று வரை 2,600 ரூபாய் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் புதனன்று காலை மருத் துவ செலவுக்காக எடுக்கச் சென்ற போது கணக்கில் பணம் இல்லை. மாறாக மைனஸ் ரூ.6,300 காட்டியது. வங்கி நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டால் முறையாக பதில் கூற வில்லை. கடன் தவணைகளுக்காக வங்கி கணக்கில் பணம் இருப்பு வைத் திருந்த நிலையில், எந்தவித முன்னறி விப்பும், காரணமும் இன்றி பணம் பிடிக்கப்பட்டுள்ளதால், தவணை செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகி யுள்ளோம். வங்கி கிளையில் உள்ள தங்களது வங்கி சேமிப்பு கணக்கை முடித்து கொள்ள கடிதம் வழங்க இருப்பதாக வேதனையுடன் தெரி வித்தனர். இதுகுறித்து வங்கி கிளை தரப் பில் கூறுகையில், பொதுத்துறை வங்கி என்பதால் தவறுதலாகவோ, முறைகேடாகவோ பணம் எடுக்கப் படாது. கொரோனா கால கட்டம் மற் றும் அதற்கு முன், பின் காலத்தில் பல் வேறு மொபைல் ஆப், தனியார் நிதி நிறுவனங்களில் ஆட்டோ கிரெடிட் அடிப்படையில் கடன் பெற்றவர்கள் சில தவணைகள் மற்றும் அபரா தங்களை அந்த சமயத்தில் செலுத்தா மல் இருந்திருக்கலாம். அதன் பின் அவர்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் தற்போது மொத்தமாக பிடித்தம் செய்யப்பட்டிருக்கலாம். பல்வேறு பகுதிகளிலும் இதுபோல் வாடிக்கையாளர்களிடம் பணம் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் பாதிக் கப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் சோதனை மேற் கொள்ளப்படுகிறது. கடன் மற்றும் தவணை முறையில் பொருள் வாங் காமல் உள்ளவர்களின் கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக இருந்தால் அவர்களிடம் கடிதம் பெற்று தலைமை கிளைக்கு அனுப்ப உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட் ஆய்வு செய்து, பணம் பிடித்தம் செய்ததற்கான காரணம் கண்டறி யப்பட்டு தெரியப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.