முதல்வர் உத்தரவுக்கெதிராக வனத்துறை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஎம் போராட்டம்!
உதகை, ஜூலை 12 – நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த புளியம்பாறை நாரங்கா கடவு ஆற்றின் குறுக்கே கான் கிரீட் பாலம் அமைப்பதற்கு தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கிய பின்னரும், வனத்துறையி னர் அதற்கெதிராக இரும்புப் பாலம் அமைக்கத் தொடங்கி யதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் சனியன்று நெல்லியாளம் நகராட்சி அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். புளியம்பாறையிலிருந்து ஆமைக்குளம் கல்லூரிக்குச் செல் லும் நாரங்கா கடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சி நீண்ட காலமாகப் போராடி வருகிறது. பாலம் இல்லாததால், சுமார் 300 குடும்பங்கள், குறிப்பாக 150 பழங் குடியினக் குடும்பங்கள், ஆற்றைக் கடக்க சிரமப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்த ஆற்றைக் கடக்க முயன்ற கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சோகமும் நடைபெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மேட்டுப் பாளையம் வந்திருந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், புளியம்பாறையைச் சேர்ந்த தமி ழரசி என்ற மாணவி பாலம் அமைக் கக் கோரிக்கை விடுத்தார். அப் போது, 100 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, SADP திட்டத் தின் கீழ் பாலம் அமைப்பதற்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டும், வனத்துறை தடையில் லாச் சான்று வழங்காமல் பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட் டது. மாறாக, வனத்துறை அவச ரகதியில் ரூ.18 லட்சம் செலவில் நான்கு அடி இரும்பு நடைபாலம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, சனியன்று, ஐம்பதுக்கும் மேற் பட்ட காவல்துறையினர் அப்பகுதி யில் குவிக்கப்பட்டனர். இதனைய டுத்து, வனத்துறை தமிழ்நாடு முதல் வரின் வாக்குறுதிக்கெதிராக இரும்பு பாலம் அமைக்கும் பணி யைத் தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் இராசி இர விக்குமார் தலைமையில், ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ், கமிட்டி உறுப்பினர்கள் ஹசைன், சாஜி, பெரியார் மணிகண்டன், சுபைர், செரியாப்பு, குஞ்சலவி, சுலைமான் உள்ளிட்ட பலர் நெல்லியாளம் நக ராட்சி அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறை உடனடியாக தடை யில்லாச் சான்று வழங்கி, SADP மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி யைப் பயன்படுத்தி நாரங்கா கடவு ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, மக்களின் சிரமத்தைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட் டத்தில் வலியுறுத்தப்பட்டது. கான் கிரீட் பாலம் அமைக்கப்படும் வரை யில் தொடர் போராட்டத்தில் ஈடுபடு வோம் என மார்க்சிஸ்ட் கட்சி எச்சரித் துள்ளது.