சென்னை, ஏப்.1- கோழி இறைச்சி, முட்டை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம், தயக்கமில்லாமல் அவற்றை மக்கள் சாப்பிடலாம் என்று தமிழக அரசு தெரி வித்துள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவுகள் சாப்பிடு வதால், கொரோனா பரவும் என்று தவறான செய்தியை ஒரு பிரிவினர் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவை மிகவும் மலிவான புரத உணவாகும் என்றும், அவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காரணி என்றும் கால்நடை பராமரிப்பு துறை குறிப்பிட்டுள்ளது. கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவ தால் கொரோனா பரவியதற்கான நிகழ்வு கள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்றும் கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.