இந்திய குடியரசின் பவள விழா கருத்தரங்கம், ஈரோட்டில் செவ்வாயன்று நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் இந்திய குடியரசின் பவளவிழா கருத்தரங்கம் ஈரோடு மாநக ராட்சி திருமண மண்டபத்தில், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தின் கோவை பகுதி தலைவர் டி.வி.குமார் தலைமையில் நடை பெற்றது. இதில், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ஜோதி குமார் சிறப்புரையாற் றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலா ளர் மு.சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். இந்த கருத்த ரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜ சேகர் நன்றி கூறினார்.