முத்தரப்பு கூட்டத்தை நடத்தி கூலியை
தருமபுரி, ஏப்.29- ஒகேனக்கல் அருகே உள்ள ராணிப் பேட்டை பகுதியில் மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண் டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழ கத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்க ளில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் தமி ழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வந்து செல்வது வழக்கம். ஒகேனக் கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், ஒகேனக்கல் அருகே உள்ள ராணிப்பேட்டை பகுதி யில் தமிழக அரசு சார்பில், மதுபானக் கடை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இக்கடை யால், சுற்றுலாப் பயணிகள் மது அருந்தி விட்டு ஆற்றில் குளிக்கும் பொழுது உயி ரிழப்பு ஏற்படும். மது பாட்டில்களை ஆற் றங்கரை ஓரங்களில் உடைப்பதால் அதன் மூலமாக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பரிசல் சவாரி செய்யும் பொழுது பரிசலில் அமர்ந்து மது அருந்தி விட்டு செல்வதால் மற்ற சுற்றுலாப் பயணி களுக்கு இடையூறு ஏற்படும். கடந்த 17 ஆண்டுக்கு முன்பு ஒகேனக் கலில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அப்பொழுது டாஸ்மாக் கடை யில் மது வாங்கி குடித்துவிட்டு ஆற்றில் குளிக்கும் பொழுது தொடர்ந்து உயிரி ழப்பு ஏற்பட்டு வந்தது. இதனையறிந்த அப்போதைய மாவட்ட ஆட்சியர், சுற்று லாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, இங்கு இயங்கி வந்த டாஸ்மாக் கடை களை மூடினார். இச்சூழலில், ஒகேனக் கல் அருகே டாஸ்மாக் கடை திறப்பது என்ற முடிவு அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி, ஒகேனக்கல் அருகே மதுபானக் கடை அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், என வலியுறுத்தி, சேலம் மாவட்ட பழைய கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச்சங்கத்தினர் செவ்வாயன்று, கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் தலைவர் நல்லதம்பி, செயலாளர் பாலசுப்பிரமணியம் பொருளாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.