tamilnadu

img

கோவை சரக டி.ஐ.ஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

கோவை டி.ஐ.ஜி விஜயகுமார், கடந்த 2009-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார். காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பாளராகவும், சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி கோவை சரக டிஐஜி ஆக பொறுப்பேற்றுக் கொண்டு பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 7 மணி வரையில் சக காவல்துறை அதிகாரிகளுடன் பணி குறித்து பேசியுள்ளார். அதன் பிறகே பந்தய சாலை பகுதியிலுள்ள அவரது முகாம் அலுவலகத்தில் தனது உதவியாளரின் துப்பாக்கியை வாங்கி தன்னைத்தானே தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரை சக போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் பணிச்சுமையா அல்லது குடும்ப பிரச்னையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.