தேன்கனிக்கோட்டை அருகே தலித் இளைஞர் மற்றும் முதியவர் மீது சாதிய வன்கொடுமைத் தாக்குதல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
கிருஷ்ணகிரி, ஜன. 1- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், மணியம்பாடி கிராமத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தலித் இளைஞர் மற்றும் முதியவர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: மணியம்பாடி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழலில், 50-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. புதனன்று நள்ளிரவு (டிச.31) புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, தலித் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பாடல்கள் ஒளிபரப்ப ஸ்பீக்கர் செட் கேட்டு உரிமையாளர் ஒரு வரை அணுகியுள்ளனர். அவர் மற்றொரு தெருவில் இருக்கும் இரண்டு ஹாரன் செட்டுகளை எடுத்துக்கொள்ளுமாறு தனது பணியாளரை அனுப்பி வைத்துள்ளார். அந்தப் பணி யாளருடன் சென்ற தலித் சிறு வர்களை, அந்தத் தெருவில் இருந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த வர்கள் வழிமறித்து, ஸ்பீக்கர்களை எடுத்துச் செல்லக்கூடாது எனத் தடுத்துத் தாக்கியுள்ளனர். கொலைவெறித் தாக்குதல்: சிறு வர்கள் தாக்கப்படுவதைக் கண்டு தடுக்கச் சென்ற வினோத்குமார் என்ற இளைஞரை, 10-க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதியினர் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவரை முள்வேலி யில் தள்ளி மிதித்ததோடு, தகாத வார்த்தைகளால் சாதியப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி யுள்ளனர். அப்போது வினோத் குமாரைக் காப்பாற்ற வந்த 70 வயது முதியவர் சாமுண்டி என்ப வரையும் அந்தக் கும்பல் இரக்க மின்றித் தாக்கியுள்ளது. தற்போது தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோத்குமார் இதுகுறித்துக் கூறுகையில், “கடந்த ஆண்டு நான் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால் இதே கும்பல் என்னைக் கட்டி வைத்து அடித்தது. அந்தப் பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு, தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒரு காரணமாக வைத்து எங்களைச் சாதி வெறியுடன் தாக்கியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். பாதிக்கப் பட்டவர்களின் உடலில் உள்ள காயம் மற்றும் முள்வேலி கீறல்களைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிபிஎம் போராட்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், ஆர்.நடராஜன், சி.பி.ஜெயராமன், கெல மங்கலம் ஒன்றியச் செயலாளர் ராஜா, மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், பொருளாளர் கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்ட றிந்தனர். இந்தச் சாதிய வன்கொடுமை யைக் கண்டித்தும், குற்றவாளி களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கெல மங்கலம், தளி ஒன்றியக் குழுக்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெள்ளியன்று (ஜன.2) காலை தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
