தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞா் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க விழா
தஞ்சாவூர், டிச.13- தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான பற்று அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்). துரை.சந்திரசேகரன் (திருவையாறு), க.அன்பழகன் (கும்பகோணம்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என்.அசோக்குமார் (பேராவூரணி), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாநகராட்சி துணை மேயர்கள் மரு.அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), சுப.தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட வருவாய் அலுவலர்கள் தெ.தியாகராஜன், வேலுமணி (தேசிய நெடுஞ்சாலை), உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.கார்த்திக் ராஜா, துணை ஆட்சியர் (பயிற்சி) ரா.கமலேஷ், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) சௌமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் இரண்டாம் கட்ட துவக்க விழாவில் 4,165 பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, செய்தித் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பத்திரிகை ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.
