பொய் வழக்கில் கைது செய்து போலீசார் துன்புறுத்தல்
கோவையில் இரண்டு தொழி லாளிகள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல்துறையின ரால் அடித்து துன்புறுத்தப்பட்டதாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். கோவை மாவட்டம், தீத்திப்பா ளையம் ஓம் சக்தி கோயில் வீதி யைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழி லாளியான விஜய் மற்றும் ஆடு மேய்க்கும் ரங்கநாதன் ஆகியோ ரின் உறவினர்கள் கூறுகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு தீத்திப் பாளையம் வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டியதாக மதுக்கரை வனத் துறையினரால் வழக்கு பதிவு செய் யப்பட்டது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள் ளது. இந்நிலையில், கடந்த செவ்வா யன்று, சாதாரண உடையில் வந்த வடவள்ளி காவல்துறையினர் விஜயை வீட்டில் இருந்து அழைத் துச் சென்றனர். குடும்பத்தினருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், வடவள்ளி பகுதியில் உள்ள தனி யார் பள்ளி வளாகத்தில் சந்தன மரம் வெட்டிய வழக்கில் விஜயை கைது செய்ததாக கூறி கடுமையாக தாக் கியுள்ளனர். பின்னர், அவரது உற வினர் ரங்கநாதனையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள் ளனர். இருவர் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை யினர், பின்னர் அவர்களை விடு வித்தனர். அடிக்கடி பொய் வழக்கு போட்டு துன்புறுத்துவதாகவும், தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து பாதிக் கப்பட்ட விஜய் கூறுகையில், “ஒன் றரை வருடத்திற்கு முன்பு தவறுத லாக சந்தன மரம் வெட்டியதற் காக என் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டது. அதன் பிறகு கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறேன். ஆனால், வேண்டுமென்றே அடிக் கடி என் மீது வழக்கு பதிவு செய் யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்தபோது திடீரென என்னை அழைத்துச் சென்ற வட வள்ளி காவல்துறையினர், மேல் மாடியில் வைத்து கொடூரமாக தாக் கினர். வழக்கில் குற்றத்தை ஒப் புக்கொள்ள வேண்டும் என்று மிரட் டினர். மேலும், சந்தன மரத்தை வெட்டி ரங்கநாதனிடம் கொடுத்த தாக நீதிமன்றத்தில் கூற வேண் டும் என்றும் தெரிவித்தனர். செம்மேடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ரங்க நாதனையும் கைது செய்து கொடூர மாக தாக்கினர். செய்யாத குற் றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தி னர். எனக்கு குடும்பம் உள்ளது. கிடைக்கும் வேலையை செய்து வருகிறேன். ஆனால், காவல்துறை யினர் தொடர்ந்து இப்படி துன்பு றுத்துகின்றனர்” என்று கூறினார்.