பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோபி மற்றும் சுதாகார் ஆகியோரின் பரிதாபங்கள் யூடியூப் சேனல் தமிழில் பிரபலமான நகைச்சுவை யூடியூப் சேனல்களில் ஒன்று.
இதில் சமூகத்தில் நடக்கும் சாதி ரீதியான பிரச்சனைகள் குறித்தும் சாதி ஆணவப்படுகொலைகள் குறித்தும் எதார்த்தமான வகையில் "சொசைட்டி பாவங்கள்" என சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் பலரும் அதற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வந்தனர். பலராலும் இந்த வீடியோ பகிரப்பட்டும் வந்தது.
இந்நிலையில் அந்த வீடியோவிற்கு எதிராக வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கறிங்கரின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.