tamilnadu

img

திருப்பூர் மாநகரில் அடிப்படை வசதிகள் கோரி வாலிபர் சங்கம் பிரச்சார இயக்கம்

திருப்பூர், அக். 13- திருப்பூர் மாநகரில் குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட  அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  பிரச்சார இயக்கம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு மாநகரக்குழு சார்பில் ஞாயிறன்று கல்லம்பாளையம் பகுதி யில் இந்த பிரச்சார இயக்கம் தொடங்கியது. இந்த பிரச்சார பய ணத்திற்கு வாலிபர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு மாநகரத் தலை வர் நா.சஞ்சீவ் தலைமை தாங்கி னார். பிரச்சார பயணத்தை துவக்கி வைத்து வாலிபர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் அருள் உரை யாற்றினார். கருவம்பாளையம், கே.வி.ஆர்.நகர், தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை, வெள்ளியங் காடு, பட்டுக்கோட்டையார் நகர், புஷ்பா நகர் ஆகிய பகுதிகளில் இந்த பயணக்குழுவினர் பிரச்சா ரம் மேற்கொண்டனர். நிறைவாக காங்கேயம் சாலை சிடிபி பஸ் நிறுத்தம் அருகில் நிறைவுற்றது.  இந்த பிரச்சார இயக்கத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலை வரும், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளருமான ஞானசேகர், மாநகர துணை செயலாளர் நவீன் லட்சுமணன், விக்னேஷ், மௌ னிஷ், மாவட்ட துணைச் செயலா ளர் உமாசங்கர் ஆகியோர் பங் கேற்று பல்வேறு மையங்களில் உரையாற்றினர். இறுதியாக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் நிறைவு செய்து வைத்து உரை யாற்றினார். இதில் மாநகரக்குழு உறுப்பினர்கள் செல்லமுத்து, ராஜா, தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.