வாஷிங்டன், மே 30- உலக சுகாதார நிறுவனத்துடனான அமெரிக்காவின் உறவை துண்டிப் பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவை பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் “உலக சுகாதார நிறு வனம் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது” என்று குற்றம்சாட்டினார். உலக சுகாதார நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி மற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ள டிரம்ப், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படவில்லை என்று உள்நாட்டி லேயே விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால், டிரம்போ நோய்த் தொற்று பரவலுக்கு சீனாவே காரணமென்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 1,02,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.