சேலம், செப்.22- சேலம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன மான செயில் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வலியு றுத்தி தொழிலாளர்கள் சனியன்று ஆலையின் முன்பு கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் பணியாற்றி வந் தனர். தற்போது 500 தொழி லாளர்கள் மட்டுமே பணி யாற்றிவருகின்றனர்.இந்நிலையில் ஆட் குறைப்புநடவடிக்கை, தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கை விட வேண்டும் என தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 15 ஆண்டு களாக ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ள 127 பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி தலைமைவகித்தார். இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண் டனர்.