tamilnadu

மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சமூக விரோத சக்திகளை புறக்கணிப்போம் - சிபிஐ, சிபிஎம்

கோவை, ஜூலை 25 – மக்கள் மத்தியில் ஒற்று மையை சீர்குலைக்கக் கூடிய வகையில் சிலைகள், கோயில் களை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோத சக்திகளை கோவை மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தி டவும், புறக்கணிக்குமாறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக்குழுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டு கூட்டம் சனியன்று காந்திபுரத்தி லுள்ள சிபிஎம் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் சிபிஐ கட்சியின் சார்பில்  முன்னாள் எம். எல்.ஏ எம்.ஆறுமுகம், ஆர்.ஏ. கோவிந்தராஜ், சி.சிவசாமி, மௌனசாமி மற்றும் சிபிஎம் சார்பில் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, கே.அஜய்கு மார், யு.கே.சிவஞானம் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு பின்னர் சிபிஎம் கோவை மாவட் டச் செயலாளர் வி.இராமமூர்த்தி மற்றும் சிபிஐ கோவை மாவட் டச் செயலாளர் வி.சுந்தரம் ஆகி யோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,

கொரோனா நோய்த் தொற்றி னாலும், அதனால் ஏற்படுத்தப் பட்ட ஊரடங்கினாலும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக் கியுள்ள மக்களை மேலும் வஞ்சிக் கக் கூடிய வகையில் உயர்த்தப் பட்ட உணவுப் பொருள் உள்ளிட்ட பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் ரூ. 7,500 நிவாரண மாக வழங்கிட வேண்டும். கிரா மப் புறங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்கள் என உயர் த்துவதோடு, அதனை பேரூராட் சிப் பகுதிகள் வரை விரிவுபடுத்திட வேண்டும்.

மத்திய பாஜக அரசு கொண்டு வரவுள்ள புதிய மின்சார திட்டத் தினால் வீடுகளுக்குக் கிடைக்கும் 100 யூனிட் மின்சாரம், விசைத் தறிக்கு கிடைக்கும் 750 யூனிட் மின் சாரம் மற்றும் விவசாயத்திற்கு கிடைக்கும் இலவச மின்சாரமும் ரத்தாகும். எனவே, புதிய மின் திட்டத்தை மாநில அரசு ஏற்க கூடாது.

பொருளாதார நெருக்கடி, தொழில் நெருக்கடி, வியாபார மின்மை, விலைவாசி உயர்வு பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்ச னைகளில் மக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்கள் மத்தியில் ஒற் றுமையை சீர்குலைக்கக் கூடிய வகையில் சிலைகள், கோயில் களை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோத சக்திகளை கோவை மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தி டவும், புறக்கணிக்கவும் இரு கட்சி களின் கோவை மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.