உடுமலை, ஜூலை 4- தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊழல் செய்த ஊராட்சி மன்ற செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 ஆண்டுகள் தொடர் போராட்டத்தின் விளைவாக, ஊராட்சி மன்ற செயலாளர் தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சி மன்ற செயலாளராக இருந்தவர் பாலமுருகன். இவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல லட்சம் ரூபாய் ஊழல் செய்தாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 8ந் தேதி விருகல்பட்டியில் நடை பெற்ற சமூக தணிக்கையில் தேசிய ஊரக உறுதி திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள் ளதாக தெரிய வந்தது.
இந்த முறைகேடு களில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற செய லாளர் பாலமுருகன் மற்றும் அவருக்கு துணையாக இருந்த அரசு துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2016ஆம் ஆண்டு டிசம்பர் 11ந் தேதி யன்று முதலமைச்சரின் தனி பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு துறை களுக்கு பதிவு தபால் மூலம் புகார் அனுப்ப பட்டது. இதனால் கோபமடைந்த பால முருகன், வாலிபர் சங்கத்தினரை மிரட்டி உள்ளார். இதுகுறித்தும் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. இந்நிலையில் ஊரக வேலை உறுதி திட்டதில் ஊழல் செய்த பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 23ந் தேதியன்று விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வி.வல்லகுண்டாபுரம் பகுதியில் காவல் துறை அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது பாலமுருகன் தூண்டு தலின் சமூக விரோதிகள் ஆர்ப்பாட் டத்தில் வந்து தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊராட்சி மன்ற செயலாளர் பாலமுருகன், சக்திவேல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மணியன் ஆகி யோர் மீது குடிமங்கலம் காவல்நிலை யத்தில் வாலிபர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், பாலமுருகனின் ஆதரவாளர்கள் அளித்த புகாரின் பேரில் வாலிபர் சங்க நிர்வாகிகள் 6 பேர் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
இதையடுத்து வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய்யான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பட்டி நால் ரோடு பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதன்பின்னரும்ஊழலில் ஈடுபட்ட வர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மீது திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வெ.ரங்கநாதன் சென்னை உயர்நீதி மன்றத்தில் 2017ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 29ந் தேதியன்று ஊராட்சி செயலாளர் பாலமுருகனை மாவட்ட நிர் வாகம் தற்காலிக பணி நீக்கம்செய்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்ற அலுவலர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறை கேடுகள் நடந்துள்ளதை தொடர்ந்து வழக்கு பதிவின் படி மாவட்ட நிர்வாகத் தினர், பாலமுருகனை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர் என தெரிவித்தார். இந்நிலையில், ஊராட்சி மன்ற செய லாளர் பாலமுருகனுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகளையும் பணி யிடை நீக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.