கோவை, பிப். 23 - குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் வன்முறை வராதா என பாஜக ஏங்குகிறது. இதற்கு தமிழக அரசு துணை போகக்கூடாது என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாநகர பொதுக்குழு கூட்டம் வரதராஜபுரம் பகுதியில் நடைபெற் றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப் போது பேசிய அவர், தொழில் மண்டலமான கொங்கு பகுதி சரிவை சந்தித்து கொண்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக பல தொழில்சாலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இதைப்பற்றி மத்திய, மாநில அரசு கவலைப்படவில்லை என்றார். மேலும்,மத்திய, மாநில பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்க ளுக்கு எந்த பலனும் இல்லை. பொருளாதார சரிவை மறைக் கவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து மத்திய பாஜக அரசு திசை திருப்பியுள்ளது. இச்சட்டத்தினால் வன்முறை வராதா என பாஜகவினர் ஏங்குகின்றனர். இதற்கு மாநில அரசு துணை போகக்கூடாது. மேலும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை வரவேற்கிறோம். இதேபோன்று கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங் களையும் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அமைக்க வேண்டும் என்றார்.